பொள்ளாச்சியில் 285 பேருக்கு கரோனா பாதிப்பு
பொள்ளாச்சியில் 285 பேருக்கு கரோனா பாதிப்பு
பொள்ளாச்சி, மே.14
பொள்ளாச்சியில் வெள்ளிக்கிழமை 285 பேருக்கு கரோனா பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.
வியாழக்கிழமையன்று
பொள்ளாச்சி சார்புநீதிமன்ற ஆண் ஊழியர் ஒருவரும், பொள்ளாச்சி பெரிய
பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த 40 வயது ஆண் ஒருவரும் கரோனா தொற்று ஏற்பட்டு
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி
நகரத்தில் 48 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 50 பேருக்கும், தெற்கு
ஒன்றியத்தில் 44 பேருக்கும், ஆனைமலை வட்டத்தில் 81 பேருக்கும்,
கிணத்துக்கடவில் 50 பேருக்கும், வால்பாறையில் 12 பேருக்கும் என மொத்தம்
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் 285 பேருக்கு கரோனா தொற்று
கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் கரோனா பரவல்
அதிகரித்துவருகிறது. குறிப்பாக பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில்
பொள்ளாச்சி,கிணத்துக்கடவு, ஆனைமலை வட்டங்களில் அதிக அளவில் கரோனா பாதிப்பு
அதிகரித்துவருகிறது.
பொள்ளாச்சி கோட்டத்தில் அதிகமானோர் அலட்சியமாக
இருந்துவருகின்றனர். முகக்கவசம், தேவையில்லாமல் வெளியில் செல்வது போன்றவை
காவல்துறையினருக்காக மட்டுமே கடைபிடிக்கின்றனர். காவல் துறையினர் இல்லாத
இடங்களில் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதே இல்லை.
பொள்ளாச்சி
மற்றும் வால்பாறை காவல் உட்கோட்டத்தில் சுமாராக 500 காவல்துறையினர்
பணிபுரிவதாக வைத்துக்கொள்வோம். ஆனால், பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் 8
லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்துவருகின்றனர். 8 லட்சம் மக்களையும்
தனித்தனியாக 500 போலீஸார் கண்காணிப்பது என்பது இயலாத காரியம். மேலும், கோவை
அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை போன்றவற்றில் புதிதாக கரோனா
நோயாளிகளை கொண்டு சென்றால் படுக்கை வசதி இல்லை.
பொள்ளாச்சி
அரசு மருத்துவமனையிலும், பிஏ கல்லூரியில் உள்ள முகாமிலும் படுக்கைகள்
ஏரத்தாள நிரம்பிவிட்டன. கரோனா பாதிப்பு ஏற்பட்டு செல்லும் நோயாளிகளுக்கு
சிகிச்சையளிக்கும் கணிசமான மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு கரோனா
தொற்று ஏற்பட்டுள்ளது.
அதேபோல், 24 மணிநேரமும் சாலையில் நின்று அந்த
வழியாக செல்லும் வாகனங்களில் செல்பவர்களிடம் நீங்கள் எங்கு செல்கிறீர்கள்,
எதற்காக செல்கிறீர்கள் கரோனா பரவுகிறது, மாஸ்க் அணியுங்கள், வெளியில்
வருவதை தவிருங்கள் என கூறும் காவல்துறையினரின் நிலை வார்த்தைகளால்
சொல்லமுடியாது.
மேலும் வருவாய்த்துறையினர் சார்-ஆட்சியர்
வைத்திநாதன் தலைமையில் தனியாக குழுக்கள் அமைத்து பொள்ளாச்சி வருவாய்
கோட்டம் முழுவதும் கண்காணித்து விதிமுறை மீறுபவர்களுக்கு அறிவுறுத்தல்
வழங்கிவருகின்றனர். இதுதவிர பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கரோனா தடுப்பு
பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இப்படி பொதுமக்களுக்காக பணியில் ஈடுபடும்
மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையில் பணியாற்றும் பல்வேறு நிலை
ஊழியர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் என பலருக்கு கரோனா தொற்று
ஏற்பட்டுள்ளது.
ஆனால், இதையெல்லாமல் பொருட்படுத்தாமல் பலர் அலட்சியமாக
இருந்துவருகின்றனர். இதனால், உயிரிழப்புகள் அதிகரித்துவருகின்றன. இதை
கருத்தில் தங்களையும், குடும்பத்தையும், உறவினர்களையும் பாதுகாக்க அனைவரும்
தங்களது வீட்டை விட்டு அவசியம் இல்லாமல் வெளியில் வருவதை
தவிர்க்கவேண்டும். வருவாய் இன்றி வாழ்வது கடினம்தான், ஆனால், உயிரை
பாதுகாப்பதற்காக சில நாட்கள் கடினமான வாழ்க்கையை வாழவேண்டும்.
இந்த ஆண்டு
உயிர் பிழைத்து வாழ்வதுதான் இலக்காக இருக்கவேண்டும்.
----

No comments