Breaking News

அதிமுக ஆட்சியில் காவல் துறை உயர் பெண் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை -உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்


அதிமுக ஆட்சியில் காவல் துறை உயர் பெண் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை 
உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ராஜேஸ்வரி திருமண மண்டபம் அருகில் உதயநிதி ஸ்டாலின் பொள்ளாச்சி திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜ், வால்பாறை இ.கம்யூனிஸ்டு வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். உடன் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. முதல்வருடன்  சென்ற பெண் எஸ்.பி. க்கே சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுக்கும் நிலை தமிழகத்தில் உள்ளது.
 அதேபோல் பொள்ளாச்சியில் 150க்கும் அதிகமான பெண்கள் சீரழிக்கப்பட்டு உள்ளனர்.

 
இதில் அதிமுகவினருக்கும் தொடர்பு இருக்கிறது. அதற்கு உதாரணமாக பொள்ளாச்சி அதிமுக மாணவர் அணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பாலியல் குற்ற வழக்கில் தொடர்பில் உள்ள அதிமுகவினர் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கைது செய்யப்படுவார்கள்.

 மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு பெண் தான். அவர் மருத்துவமனைக்குள் 80 நாட்கள் வரை இருந்தார். அவர் எப்படி உயிரிழந்தார் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.
 அவருடைய ரத்த சொந்தங்கள் தீபா, தீபக் ஆகியோரை கூட மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் இருந்துள்ளனர் இப்போதைய ஆட்சியாளர்கள்.

 ஆகவே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க திமுகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

 பொள்ளாச்சி மாவட்டமாக வேண்டி கோரிக்கை இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி மாவட்டம் ஆக்கப்படும். ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் என்றதுடன் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளையும் வழங்கினார்.

No comments