Breaking News

அதிமுக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்கியிருந்த விடுதியில் ஐடி ரெய்டு


 அதிமுக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் தங்கியிருந்த விடுதியில் ஐடி ரெய்டு

பொள்ளாச்சி. ஏப். 2.
 வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆனைமலை அருகே தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.

 இந்த தங்கும் விடுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி, திமுக கூட்டணியை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோர் தங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் வேட்பாளர்கள் தங்கியுள்ள விடுதியில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

 இதையடுத்து வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படை (எண் 6 ) குழுவினர் மற்றும் வருமானவரித் துறையினர் இணைந்து தங்கும் விடுதியில் சோதனை நடத்தியுள்ளனர். 

நேற்று இரவு முழுவதும் நடந்த சோதனையில் பணம் எதுவும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments