Breaking News

டாப்சிலிப்பில் காட்டுயானை தாக்கி பெண் உயிரிழப்பு


டாப்சிலிப்பில் காட்டுயானை தாக்கி பெண் உயிரிழப்பு

பொள்ளாச்சி. ஏப். 15.

டாப்சிலிப்பில் காட்டுயானை தாக்கி மலைவாழ் பெண் உயிரிழந்தார்.

ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப்பில் கூமாட்டி செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்தவர் பரமன். இவரது மனைவி வனத்தாய்.
 இவர் வியாழக்கிழமை மாலை கூமாட்டி செட்டில்மெண்ட் பகுதி அருகே உள்ள வனப்பகுதிக்குள்  விறகு சேகரிக்க சென்றுள்ளார்.
 அப்போது அங்கு வந்த காட்டு யானை தாக்கியதில் வனத்தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலர் நவீன் குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

மேலும் உடனடியாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 50,000 நிதி உதவி
 வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments