கேரளா வேளாண் அமைச்சருக்கு இரண்டாவது முறையாக கரோனா
கேரளா வேளாண் அமைச்சருக்கு இரண்டாவது முறையாக கரோனா
பொள்ளாச்சி. ஏப். 15.
கேரள வேளாண் அமைச்சர் சுனில் குமாருக்கு இரண்டாவது முறையாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை மாலை கேரள வேளான்
அமைச்சர் சுனில் குமாருக்கு கரோனா தொற்று இரண்டாவது முறையாக கண்டறியப்பட்ட நிலையில், திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments