Breaking News

பொள்ளாச்சியில் கரோனாவுக்கு மூன்றாவது பலி


பொள்ளாச்சியில் கரோனாவுக்கு மூன்றாவது பலி

பொள்ளாச்சி. ஏப். 15. 

பொள்ளாச்சியில் ஒரே வாரத்தில் கரோனாவுக்கு மூன்றாவது பலி ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் தொடர்ந்து கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து அலட்சியமாகவே இருந்து வருகின்றனர்.

வியாழக்கிழமை பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் 16 பேருக்கும், தெற்கு ஒன்றிய பகுதியில் 15 பேருக்கும், வடக்கு ஒன்றிய பகுதியில் நான்கு பேருக்கும், ஆனமலை தாலுகாவில் 10 பேருக்கும், கிணத்துக்கடவில் நாலு பேருக்கும் என 50 பேருக்கு புதிதாக  கண்டறியப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் 80 வயது முதியவர் கரோனாவிற்கு வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். இது இந்த வாரத்தில் ஏற்பட்ட மூன்றாவது உயிர் இழப்பாகும்.

No comments