Breaking News

கனமழையால் குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து

 கனமழையால் குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து

பொள்ளாச்சி ஏப்ரல் 15

 பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் நேற்று நள்ளிரவில் கனமழை பெய்தது. இதனால், ஆழியாறு அடுத்த குரங்கு அருவியல் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

 நேற்றுவரை ஆழியாறு குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் விவசாயம் சார்ந்த பகுதிகளாக உள்ளது குறிப்பாக தென்னை விவசாயம் அதிகமாக உள்ளது தற்போது வறட்சி கலம் என்பதால் விவசாயிகள்தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து வருகின்றனர்.

 இந்நிலையில், நேற்று நள்ளிரவில் பொள்ளாச்சி ஆழியாறு வால்பாறை நவமலை ஆழியாறு வேட்டைக்காரன்புதூர் சர்க்கார்பதி பொங்கலூர பெதப்பம்பட்டி பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை அளவு மில்லி மீட்டரில்,..
..
ஆழியாறு- 67.6, வால்பாறை-26, அப்ப நீராறு-36, லோயர் நீராறு -40, காடம்பாறை-9, சர்க்கார்பதி- 35, வேட்டைக்காரன்புதூர்- 18, மணக்கடவு-55,  காங்கேயம்-107, நவமலை-29, பொள்ளாச்சி- 62, சுல்தான்பேட்டை-2, பொங்கலூர்-63, பல்லடம்-34, பெதப்பம்பட்டி-93

No comments