Breaking News

பொள்ளாச்சி கோட்டத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம் இடங்கள்

பொள்ளாச்சி கோட்டத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம் இடங்கள்


பொள்ளாச்சி, ஏப்.27
 பொள்ளாச்சி கோட்டத்தில் புதன்கிழமை காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்களை வருவாய்த்துறையினர் அறிவித்துள்ளனர்.
 பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமையன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 115 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, வருவாய் கோட்ட பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
 முகாம் நடைபெறும் இடங்கள்

பொள்ளாச்சி நகரம்-சுப்பையன்நகர், வெங்கடேசா காலனி, நல்லப்பா நகர், கண்ணப்பன்நகர்

வடக்கு ஒன்றிய பகுதிகள்-ஆலாம்பாளையம், ராமபட்டிணம், நல்லிக்கவுண்டன்பாளையம்

தெற்கு ஒன்றிய பகுதிகள்- பழையூர், நாச்சிபாளையம், ஆவல்சின்னாம்பாளையம், மோதிராபுரம், சிங்காநல்லூர், மாக்கினாம்பட்டி, சூளேஸ்வரன்பட்டி, சின்னாம்பாளையம், பாலமநல்லூர், சமத்தூர்.

ஆனைமலை வட்டம்- ரமணமுதலிபுதூர், கோட்டூரில் குப்பன் செட்டியார் வீதி, ஆனைமலையில் வெண்ணிலா திருமணமண்டபம், கிழவன்புதூர்.

வால்பாறை-ஹைபாரஸ்ட்

கிணத்துக்கடவு- காரச்சேரி, கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம்.

---


 

No comments