Breaking News

பொள்ளாச்சி அருகே மனைவியை கொலை செய்த கணவன் கைது


பொள்ளாச்சி அருகே மனைவியை கொலை செய்த கணவர் கைது

பொள்ளாச்சி. ஏப்.23

பொள்ளாச்சி அருகே கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அடுத்த தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமராஜ் (36), விவசாயி.
 இவருக்கும் சீலக்காம்பட்டி மலையாண்டிபட்டினம் பகுதியை சேர்ந்த சரண்யா(22) என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.

 இவர்களுக்கு ஐந்து வயதில் லோகேஷ் என்ற மகனும் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்று அதிகாலை லட்சுமராஜ் சரண்யாவை அரிவாளால் கையை வெட்டியுள்ளார். அவர் கூச்சலிடவே சரண்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

 கொலை செய்துவிட்டு லட்சுமராஜ் தனது மகனுடன் கோட்டூர் போலீசில் சரணடைந்தார். கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரண்யாவின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட உள்ளது.

No comments