Breaking News

டாப்சிலிப், ஆழியாறு குரங்கு அருவி மூடல்

டாப்சிலிப், ஆழியாறு குரங்கு அருவி மூடல்

பொள்ளாச்சி, ஏப்.19
 

பொள்ளாச்சி டாப்சிலிப், ஆழியாறு குரங்கு அருவி, ஆழியாறு பூங்கா ஆகியவை கரானோ பரவல் காரணமாக திங்கள்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது.
 
 கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தளங்களில் முக்கியமானதாக டாப்சிலிப், ஆழியாறு பூங்கா, குரங்கு அருவி ஆகியவை இருந்துவருகிறது. தற்போது தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு டாப்சிலிப், ஆழியாறு பூங்கா, குரங்கு அருவி போன்றவற்றை மூட உத்தரவிட்டுள்ளது.
 
 இதையடுத்து, திங்கள்கிழமை காலை டாப்சிலிப் செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆழியாறு அணை பூங்காவும் மூடப்பட்டு நுழைவுவாயிலில் சுற்றுலாபயணிகளுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பும் ஒட்டப்பட்டுள்ளது. 
 
ஆழியாறு குரங்கு அருவிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வால்பாறை செல்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


-----



 

No comments