பொள்ளாச்சியில் இரண்டு நாட்களில் 88 பேருக்கு புதிதாக கரோனா
பொள்ளாச்சியில் 2 நாட்களில் 88 பேருக்கு கரோனா
பொள்ளாச்சி, ஏப்.14
பொள்ளாச்சி
பகுதியில் தினசரி கரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே
வருகிறது. செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் மட்டும் 88 பேருக்கு
புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி
நகராட்சி பகுதியில் இரண்டு நாட்களில் 15 பேருக்கும், தெற்கு
ஒன்றியப்பகுதிகளில் 30 பேருக்கும், வடக்கு ஒன்றியப்பகுதிகளில் 7
பேருக்கும், கிணத்துக்கடவு பகுதிகளில் 14 பேருக்கும், ஆனைமலை தாலூக்கா
பகுதிகளில் 22 பேருக்கும் கரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பொள்ளாச்சி நகராட்சி பகுதியை சேர்ந்த 49 வயது ஆண்டு ஒருவர் கரோனா
தொற்றால் புதன்கிழமை உயிரிழந்தார்.
----

No comments