Breaking News

பொள்ளாச்சியில் கரோனா பாதிப்பிற்கு இரண்டாவது உயிரிழப்பு

பொள்ளாச்சியில் கரோனா பாதிப்பிற்கு இரண்டாவது
உயிரிழப்பு

பொள்ளாச்சி, ஏப்.14
 

பொள்ளாச்சியில் கரோனா பாதிப்பிற்கு புதன்கிழமை ஒருவர் உயிரிழந்தார். இது பொள்ளாச்சி பகுதியில் கடந்த 10 நாட்களுக்குள் கரோனா பாதிப்பால் ஏற்படும் இரண்டாவது உயிரிழப்பு ஆகும். 

 பொள்ளாச்சி பகுதியில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் இருப்பவர்கள் அதிகமாக உள்ளனர். இதனால், கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. 
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது புதன்கிழமை பொள்ளாச்சி நகரப்பகுதிக்குள் 49 வயது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


 

No comments