Breaking News

பொள்ளாச்சியில் புதிதாக 51 பேருக்கு கரோனா

பொள்ளாச்சியில் புதிதாக 51 பேருக்கு கரோனா

அபாய கட்டத்தில் பொள்ளாச்சி
 
பொள்ளாச்சி, ஏப்.12
 
 

பொள்ளாச்சியில் திங்கள்கிழமை புதிதாக 51 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.
 
பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் பொதுமக்களின் அலட்சியத்தால் கரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டேவருகிறது. 
 
திங்கள்கிழமை பொள்ளாச்சி நகரப்பகுதியில் 19 பேருக்கும், தெற்கு ஒன்றியப்பகுதியில் 13 பேருக்கும், வடக்கு ஒன்றியப்பகுதியில் 8 பேருக்கும், கிணத்துக்கடவு பகுதியில் 9 பேருக்கும், ஆனைமலை தாலூக்கா பகுதியில் 2 பேருக்கும் என திங்கள்கிழமை ஒரே நாளில் 51 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
 
 பொதுமக்கள் அலட்சியமே கரோனா தொற்று பரவல் காரணமாக இருக்கிறது. வங்கிகள், கடைகள், கோயில்கள் என பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவங்கள் அணியாமலும் இருந்துவருகின்றனர்.

----

 

No comments