Breaking News

பொள்ளாச்சியில் புதிதாக 28 பேருக்கு கரோனா

பொள்ளாச்சியில் புதிதாக 28 பேருக்கு கரோனா

பொள்ளாச்சி, ஏப்.11
 

 பொள்ளாச்சியில் புதிதாக ஞாயிற்றுக்கிழமை 28 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
 
 பொள்ளாச்சியில் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாததால் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டுவருகிறது. 
 
வெள்ளிக்கிழமை 31 பேருக்கும், சனிக்கிழமை 30 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் 12 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 5 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 2 பேருக்கும், ஆனைமலை தாலூக்காவில் 9 பேருக்கும் என மொத்தம் 28 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
 
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெளியில் செல்பவர்களில் பலர் முகக்கவசம் அணியாமலேயே செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

---

 

No comments