பொள்ளாச்சியில் 31 பேருக்கு கரோனா
பொள்ளாச்சியில் 31 பேருக்கு கரோனா
பொள்ளாச்சி, ஏப்.9
பொள்ளாச்சி
கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு ஏற்பட்டபோது ஒரே நாளில் அதிக பட்சமாக
15பேருக்கு மேல் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனால், தற்போது புதன்கிழமை 8
பேருக்கும், வியாழக்கிழமை 16 பேருக்கும் என இருந்த தொற்று வெள்ளிக்கிழமை
31 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.<
/b>
இதில் பொள்ளாச்சி நகராட்சி அளவில் 11
பேருக்கும், தெற்கு ஒன்றிய பகுதியில் மாக்கினாம்பட்டி, வஞ்சியாபுரம்,
சின்னாம்பாளையம், சிஞ்சுவாடி உள்ளிட்ட பகுதிகளில் 10 பேருக்கும், வடக்கு
ஒன்றியம் புளியம்பட்டி, திப்பம்பட்டி பகுதிகளில் 5 பேருக்கும், ஆனைமலை,
பெத்தநாயக்கனூர் பகுதிகளில் 5 பேருக்கும் என 31 பேருக்கு கரோனா தொற்று
ஏற்பட்டுள்ளது.
தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பு ஆகிக்கொண்டே
வருகிறது.
ஆனால், பொள்ளாச்சி பகுதி பொதுமக்கள் சிலர் மட்டுமே
கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கின்றனர். பெரும்பாலானோர் மாஸ்க்
அணியாமலும், அலட்சியமாகவும் இருந்துவருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களாக
கரோனா தொற்று பரவல் ஏற்படுவதுபோன்று இன்னும் சில நாட்கள் தொடருமானால்
பொள்ளாச்சி பகுதியில் கரோனா பரவலை கட்டுப்படுத்தவும் மிகவும்
சிரமாகிவிடும்.
கரோனா பரவலை தடுக்க மாஸ்க் அணிவது போன்ற
பாதுகாப்பு நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
----

No comments