பொள்ளாச்சியில் புதிதாக 30 பேருக்கு கரோனா
பொள்ளாச்சியில் புதிதாக 30 பேருக்கு கரோனா
பொள்ளாச்சி, ஏப்.10
பொள்ளாச்சியில் வெள்ளிக்கிழமை 31 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், சனிக்கிழமை புதிதாக மீண்டும் 30 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதில் பொள்ளாச்சி நகராட்சி அளவில் 7 பேருக்கும், தெற்கு ஒன்றிய பகுதியில் 12 பேருக்கும், வடக்கு ஒன்றியப்பகுதிகளில் 2 பேருக்கும், ஆனைமலை, பெத்தநாயக்கனூர், சேத்துமடை உள்ளிட்ட ஆனைமலை தாலூக்கா பகுதிகளில் 9 பேருக்கும் என 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவேணடும், கூட்டமான இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்கவேண்டும்.

No comments