பொள்ளாச்சியில் 16 பேருக்கு கரோனா
பொள்ளாச்சியில் 16 பேருக்கு கரோனா
பொள்ளாச்சி, ஏப்.8
பொள்ளாச்சியில்
புதன்கிழமை 8 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒருவர்
உயிரிழந்தார்.
இந்நிலையில், வியாழக்கிழமை பொள்ளாச்சி பாலகோபாலபுரம்
வீதியில் 3 பேருக்கும், கோட்டூர் சாலை சிடிசி காலனி பகுதியில்
ஒருவருக்கும், இமாம்கான்வீதியில் ஒருவருக்கும், மகாலிங்கபுரம் நல்லப்பா
நகரில் ஒருவருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி
தெற்கு ஒன்றிய பகுதியில் 5 பேருக்கும், வடக்கு ஒன்றியப்பகுதியில் 3
பேருக்கும், ஆனைமலையில் இருவருக்கும் என பொள்ளாச்சியில் மட்டும் 16
பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
----

No comments