Breaking News

கேரள மருத்துவகழிவுகள் தமிழக விவசாய பகுதிகளில் கொட்டிய லாரிகள் சிறைபிடிப்பு

கேரள மருத்துவகழிவுகள் தமிழக விவசாய பகுதிகளில் கொட்டிய லாரிகள் சிறைபிடிப்பு

 பொள்ளாச்சி. ஏப். 8.
 

 தமிழக - கேரள எல்லையான செமனாம்பதி அருகே கேரளத்திலிருந்து தமிழகத்திற்குள் கொண்டு வந்து மருத்துவ கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகளை கொட்ட வந்த 6 டாரஸ் லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்து உள்ளனர்.


 கேரளத்தில் மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை சாலையோரங்கள், விவசாய பகுதிகளிலோ கொட்டினால் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.

 இதனால், தமிழகப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள்,நீராதரங்கள் போன்றவற்றில் கேரளத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுகளை கொண்டு வந்து கொட்டிச் செல்கின்றனர். இந்த சம்பவங்கள் பல ஆண்டுகளாக தொடர் கதையாகி வருகிறது.
 தமிழகத்திலுள்ள தரகர்கள் சிலர் உதவியுடன் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.


 இந்நிலையில், பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி பகுதியில் சஞ்சு ஆண்டனி என்பவர் சொந்தமாக நிலம் வாங்கி வைத்துள்ளார். இவர் கேரளத்திலிருந்து மருத்துவ கழிவுகள், ரசாயன கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற பல்வேறு கழிவுகளை மிகப்பெரிய பள்ளங்கள் தோண்டி அதில் புதைத்து விடுகிறார்.
 
 

மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவற்றை தீயிட்டு எரித்தும் வந்துள்ளார்.
 இதற்கு இவர் கேரளத்தில் இருந்து கழிவுகள் கொண்டு வருபவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொள்வதாகக் கூறப்படுகிறது.
 இன்று அதிகாலை கேரளத்திலிருந்து கழிவுகளை ஏற்றி வந்து சஞ்சு ஆண்டனியின் நிலத்தில் கொட்டி கொண்டிருக்கும்போது விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் 6 டாரஸ் லாரிகளை சிறை பிடித்தனர்.
 
 மேலும் வருவாய் துறையினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
 
தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் விவசாயப் பகுதிகள் போன்றவற்றில் இது போன்ற கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரம் பாதிப்பு ஏற்படுகிறது மேலும் மருத்துவ கழிவுகளிலிருந்து பாதரசம் போன்றவை வெளியேறி தண்ணீரில் கலந்தால் அவை பல்வேறு அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். 
 
தமிழக பகுதிகளில் இது போன்ற கழிவுகளை கொட்ட வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தின் சுகாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது. நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயம் நீராதாரங்கள் போன்றவை கடுமையாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments