Breaking News

பொள்ளாச்சியில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்


பொள்ளாச்சியில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

பொள்ளாச்சி. மார்ச். 8

டிப்பர் லாரி களுக்கான வாடகை களை உயர்த்த கோரிக்கை வைத்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனமலை தாலுகா டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை தாலுகாக்களில் 250க்கும் அதிகமான டிப்பர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. 
இந்த லாரிகள் முக்கியமாக கட்டுமான பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் இன்சூரன்ஸ் தொகை உயர்வு போன்றவற்றால் தங்களுக்கு வாடகை கட்டுபடி ஆகவல்லை,ஆகவே வாடகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து  வேலை
நிறுத்தத்தை துவங்கியுள்ளனர். 

திங்கள்கிழமை துவங்கியுள்ள வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments