வெங்காய வியாபாரி இடம் கணக்கில் வராத ரூ 1.50 லட்சம் பறிமுதல்
வெங்காய வியாபாரி இடம் 1.50 லட்சம் பறிமுதல்
பொள்ளாச்சி. மார்ச். 8.
கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்த சரக்கு வாகனத்தில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவந்த ரூ 1.50 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உமாமகேஸ்வரி, தென்னரசு, கிருஷ்ணசாந்த், தேன்மொழி ஆகியோர் வாகன சோதனையில் திங்கள் கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கேரளாவில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் முறையான ஆவணங்கள் இன்றி ரூ 1.50 லட்சம் தொகை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த தொகையை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆனைமலை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடாச்சலம் இடத்தில் தொகையை ஒப்படைத்தனர்.
No comments