ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.17 லட்சத்து 67 ஆயிரத்து 610 தொகை பறிமுதல்
ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.17 லட்சத்து 67 ஆயிரத்து 610 தொகை பறிமுதல்
பொள்ளாச்சி, மார்ச்.9
முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.17 லட்சத்து 67 ஆயிரத்து 610 தொகையை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
ப
ொள்ளாச்சி
அடுத்த கோபாலபுரம் சோதனைச்சாவடியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தேர்தல்
பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தாலூக்கா காவல் சோதனைச்சாவடி போலீஸார்
இணைந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த காரை
நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மாட்டு வியாபாரத்திற்காக முறையான ஆவணங்கள்
இன்றி கொண்டுவந்த ரூ.3 லட்சத்து 29 ஆயிரத்து 500 ஐ பறிமுதல் செய்தனர்.
அதேபோல், அதே பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 4 மணியளவில் கேரளாவில்
இருந்து வந்த காரை சோதனை செய்தனர். அதில் நான்குபேர் கோழிக்கோட்டில்
இருந்து பொள்ளாச்சிக்கு மாட்டு வியாபாரத்திற்காக முறையான ஆவணங்கள் இன்றி
கொண்டுவந்த ரூ.5 லட்சத்து 73 ஆயிரத்து 500 ஐ தேர்தல் பறக்கும் படை
அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி
அடுத்த ஜமீன் முத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆவணங்கள்
இன்றி கொண்டுவந்த ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 400 மற்றும் ரூ.63750 ஆயிரம்
பறிமுதல் செய்துள்ளனர். மொ
ஆனைமலை அருகே பொள்ளாச்சி-மீன்கரை சாலையில் அம்பராம்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார், எஸ்ஐ கருணாநிதி, தலைமைக்காவலர்கள் சுனிதா, சமுத்திரபாண்டி ஆகியோர் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 900 தொகையை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி-மீன்கரை சாலையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளான பொள்ளாச்சி தெற்கு
வட்டார
வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன் தலைமையிலான குழுவினர் செவ்வாய்க்கிழமை
வாகன சோதனையில் ஈடுபட்ட போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 91 ஆயிரம்
பறிமுதல் செய்தனர்.
மொத்தம் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகள் செவ்வாய்க்கிழமை மட்டும் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.17 லட்சத்து 67 ஆயிரத்து 610 தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


No comments