கிணத்துக்கடவு தொகுதி மேலும் வளர்ச்சியடைய பாடுபடுவேன்
கிணத்துக்கடவு தொகுதி மேலும் வளர்ச்சியடைய பாடுபடுவேன்
பொள்ளாச்சி, மார்ச்.18
கிணத்துக்கடவு தொகுதிக்கு புதிய திட்டங்களை கொண்டுவந்து மேலும் வளர்ச்சியடைய பாடுபடுவேன் அதிமுக வேட்பாளர் செ.தாமோதரன் தெரிவித்தார்.
கிணத்துக்கடவு
தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் வேளாண்மை துறை அமைச்சருமான
செ.தாமோதரன் ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
வீடுவீடாக சென்ற அதிமுக வேட்பாளருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
அளித்தனர்.
பொதுமக்களிடம் வாக்குசேகரிக்கும்போது செ.தாமோதரன்
பேசியது...
கிணத்துக்கடவு தொகுதிக்கு அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை
தந்துள்ளது. பொதுமக்கள் வாக்களித்து என்னை வெற்றிபெறச்செய்தால்
கிணத்துக்கடவு தொகுதிக்கு பல்வேறு புதிய திட்டங்களை கொண்டுவந்து
தொகுதியை மேலும் வளர்ச்சியடையச் செய்வேன் என்றார்.
உடன்
மலுமிச்சம்பட்டி ஒன்றிச்செயலாளர் சதீஷ்குமார், மாநில எம்ஜிஆர் மன்ற இணை
செயலாளர் திருமலைசாமி, பேரூராட்சி கழக செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.
---

No comments