Breaking News

பொள்ளாச்சி மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது- பொள்ளாச்சி வி.ஜெயராமன்

பொள்ளாச்சி மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது


பொள்ளாச்சி வி.ஜெயராமன்

பொள்ளாச்சி, மார்ச்.18
 
 

பொள்ளாச்சியில் அரசு கலைக்கல்
லூரி கொண்டுவந்து  பொள்ளாச்சி மக்களின் 60 ஆண்டு காலை கோரிக்கையை நிறைவேற்றியுள்ளேன் என பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தெரிவித்தார்.
 
  பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளரும், சட்டப்பேரவை துணைத்தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பொள்ளாச்சி நகரத்திற்குட்பட்ட 9வது வார்டு கோட்டாம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை பிரச்சாரம் செய்தார். 
 
உடன் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் கிருஷ்ணகுமார், அதிமுக நிர்வாகிகள் ஜேம்ஸ்ராஜா, வீராசாமி, தனசேகர், அருணாச்சலம் உட்பட பலர் இருந்தனர்.
 
பிரச்சாரத்தின்போது சட்டப்பேரவை துணைத்தலைவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
 பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியது...
 

பொள்ளாச்சி நகரம், கிராமப்பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளை அரசு கல்லூரிகளில் படிக்க வைக்க கோவை, உடுமலை போன்ற பகுதிகளுக்கு அனுப்பவேண்டிய நிலை இருந்தது. தினமும் நீண்டதூரம் பயனித்து கல்வி கற்கவேண்டிய சிரமத்தில் இருந்தனர். 
 
ஆகவே பொள்ளாச்சியில் அரசு கலைக்கல்லூரி அமைத்து தரவேண்டி 60 ஆண்டுகாலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்துவந்தனர். இதையடுத்து, நான் சட்டப்பேரவையில் பொள்ளாச்சிக்கு அரசு கலைக்கல்லூரி வேண்டி கோரிக்கை வைத்தேன். கோரிக்கையை அடுத்து அரசு கலைக்கல்லூரி கொண்டுவரப்பட்டதுடன், புதிய கட்டடம் கட்ட ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கல்லூரிக்கு புதிய கட்டடமும் கட்டப்பட்டுவருகிறது. 
 
பொள்ளாச்சிலேயை அரசு கலைக்கல்லூரி அமைந்துவிட்டதால் ஏழை மாணவர்கள் வெளியூர்களில் சென்று கல்வி கற்கும் நிலை மாறி பொள்ளாச்சியிலேயே கல்வி கற்கின்றனர். அதிமுக அரசு கல்விக்கு முக்கியத்துவம் வழங்கிவருகிறது. மீண்டும் நான் வெற்றிபெற்றால் பொள்ளாச்சி பல்வேறு திட்டங்களை கொண்டுவருவேன் என்றார்.


 

No comments