பொள்ளாச்சி திமுக வேட்பாளர் மனுத்தாக்கல்
பொள்ளாச்சி திமுக வேட்பாளர் மனுத்தாக்கல்
பொள்ளாச்சி, மார்ச்.18
பொள்ளாச்சி திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன் வியாழக்கிழமை பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதனிடம் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
திமுகவின்
பொள்ளாச்சி நகர பொறுப்பாளராக இருப்பவர் எலும்பு முறிவு மருத்துவர்
வரதராஜன். இவருக்கு பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட திமுக சார்பில்
வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை பொள்ளாச்சி தேர்தல் நடத்தும்
அலுவலர் வைத்திநாதனிடம் திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜன் வேட்புமனு
தாக்கல் செய்தார். உடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர்
நித்தியானந்தம், திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல்செல்வராஜ்
ஆகியோர் உடன் இருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வழியில் திமுக
தொண்டர்கள், நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு வழங்கினர்.
திமுக
வேட்பாளர் வரதராஜன் கூறுகையில், நான்வெற்றிபெற்றவுடன் பொள்ளாச்சியை
மாவட்டமாக்க நடவடிக்கை எடுப்பேன். நீராதாரங்களை மேம்படுத்துவேன், பாதாள
சாக்கடை பணிகள் சீராக நடைபெற நடவடிக்கை எடுப்பேன், பேருந்துநிலையத்தை
மாற்று இடத்திற்கு கொண்டு செல்லவும், பாலியல் பிரச்சனையில்
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
----

No comments