Breaking News

போலீஸார் அணிவகுப்பு

போலீஸார் அணிவகுப்பு

பொள்ளாச்சி, மார்ச்.21

 

பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவத்தினர் போலீசார் ஞாயிற்றுக்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினர்.
 பொள்ளாச்சி காந்தி சிலையில் தொடங்கிய கொடி அணிவகுப்புக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள் அரசு தலைமை வகித்தார்.
இதில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர், துணை ராணுவத்தினர், ஆயுதப்படை போலீசார் மற்றும் பொள்ளாச்சி காவல் உட்கோட்ட போலீசார் என மொத்தம் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த அணிவகுப்பானது பொள்ளாச்சி காந்தி சிலை சந்திப்பில் தொடங்கி சார்- ஆட்சியர் அலுவலகம்,  கிழக்கு  காவல் நிலையம்,  வெங்கட்ரமணா வீதி, ராஜாமில் சாலை வழியாக நகராட்சி அலுவலகம் அருகில் நிறைவடைந்தது. இந்த  கொடி அணிவகுப்பில்  பொள்ளாச்சி டிஎஸ்பி சிவகுமார் மற்றும் பொள்ளாச்சி காவல் உட் கோட்டத்துக்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள் எஸ் ஐ மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

 

No comments