கோவை மாவட்டத்தில் 861 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜ் தகவல்
கோவை மாவட்டத்தில் 861 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜ் தகவல்
பொள்ளாச்சி, மார்ச்.26
பொள்ளாச்சி-உடுமலை
சாலையில் உள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் பொள்ளாச்சி,
வால்பாறை சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
வகுப்புகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இதனை மாவட்ட
ஆட்சியர் எஸ். நாகராஜ் ஆய்வுசெய்தார். கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள அஞ்சல்
வாக்கு சீட்டு செலுத்து மையத்தையும் பார்வையிட்டார். மாதிரி வாக்குச்
வாக்குச் சாவடி மையத்தையும் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது...
கோவை
மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 4427 வாக்குச்சாவடி
மையங்களில் 21 ஆயிரத்து 256 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற
உள்ளனர்.அவர்களுக்கு ஒன்பது இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சட்டப்பேரவை தொகுதி உள்ள வாக்குச்சாவடியில்
பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்றுவரும் பயிற்சி
வகுப்புகளை நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது.
இங்கு
வழங்கப்படும் பயிற்சிகளை கொண்டு வாக்குச்சாவடிகளில் அவர்கள் சிறப்பாக
பணியாற்ற முடியும். கோவை மாவட்டத்தில் 861 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என
கண்டறியப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினரின் முகவர்கள் மற்றும் தேர்தல்
பார்வையாளர்களுடன் கலந்து பேசி பதட்டமான வாக்குச்சாவடிகள் குறித்து
இறுதியான எண்ணிக்கை நாளை வெளியிடப்படும்.
தற்பொழுது கரோனா வைரஸ் பரவல்
அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் 2 மீட்டர் சமூக இடைவெளி மற்றும் முக கவசம்
அணிவது கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மீண்டும் கோவிட் கேர் சென்டர் அமைக்க
நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கரோனா
வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க உதவும் என தெரிவித்தார்.
---

No comments