பொள்ளாச்சி 8 மனுக்களும் வால்பாறையில் 6 மனுக்கள் ஏற்பு
பொள்ளாச்சி 8 மனுக்களும் வால்பாறையில் 6 மனுக்கள் ஏற்பு
பொள்ளாச்சி, மார்ச்.20
பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் 8 மனுக்களும், வால்பாறை சட்டப்பேரவை தொகுதியில் 6 வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக, திமுக, சுயேட்சை உள்ளிட்ட 24 வேட்பாளர்களின்
36 மனுக்களும், வால்பாறை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக, இ.கம்யூ, சுயேட்சை உள்ளிட்ட 11
வேட்பாளர்கள் 15 வேட்புமனுக்களும் தாக்கல் செய்தனர்.
சனிக்கிழமை
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
பொள்ளாச்சியில் தேர்தல்
நடத்தும் அலுவலர் வைத்திநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தணிகைவேல்
ஆகியோர் பொள்ளாச்சியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகத்திலும், வால்பாறை
சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமி, உதவி
தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடாச்சலம் ஆகியோர் ஆனைமலையில் உள்ள தேர்தல்
நடத்தும் அலுவலகத்திலும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செய்தனர்.
இதில்
பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக, நாம்தமிழர்,
மக்கள்நீதிமய்யம், பகுஜன் சமாஜ் ஆகிய வேட்பாளர்களின் மனுவும் இரண்டு
சுயேட்சை வேட்பாளர்களின் மனுவும் என 8 வேட்புமனுக்கள்
ஏற்றுக்கொள்ளப்பட்டது. மீதுமுள்ள 28 வேட்புமனுக்கள் தள்ளுபடி
செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வால்பாறை தொகுதி அதிமுக,
இ.கம்யூ.,தேமுதிக., மக்கள்நீதிமய்யம், நாம்தமிழர் ஆகிய கட்சிகளின்
வேட்புமனுக்கள், 1 சுயேட்சை உள்ளிட்ட 6 பேரின் வேட்புமனுக்களும்
ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 9 பேர் வேட்புமனுக்கள் தள்ளுபடி
செய்யப்பட்டது.
----
No comments