பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதி ஒரு பார்வை
பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதி ஒரு பார்வை
பொள்ளாச்சி
மொத்த வாக்காளர்கள்-2 லட்சத்து 25 ஆயிரத்து 777 பேர்
ஆண்கள்-1,08,302
பெண்கள்-1,17,443
மற்றவை-32
கோவை மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே பொள்ளாச்சி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வருவாய் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதி முக்கியத்துவம் வாய்ந்தது.
பொள்ளாச்சி என்றாலே தென்னை மரம், இளநீர், தேங்காய் என்பது நினைவில் வரும். அப்படி தென்னை விவசாயம், தென்னை சார்ந்த தொழில்கள் அதிகம் உள்ள பகுதி. எப்போதும் பசுமையாக காட்சியளிக்கும் பகுதி. பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் தென்னைநார் தொழிற்சாலைகள் அதிகம். தென்னைநார், நார்கட்டிகள், தென்னைநார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் போன்றவை வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுகிறது.
ரூ.2000 கோடிக்கும் மேல் தென்னைநார் சார்ந்த ஏற்றுமதி நடைபெறுகிறது.br />
பொள்ளாச்சி சுப்ரமணியம் சுவாமி கோயில், மாரியம்மன்கோயில் போன்றவை பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற கோயில்களாகும். கவுண்டர் சமூகத்தினர் அதிகமாகவும், செட்டியார் சமூகத்தினர் அதற்கு அடுத்தபடியாகவும், நாடார், பட்டியல் இனத்தவர்களும் வசித்துவருகின்றனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
பொள்ளாச்சி தொகுதியில் நகரங்களை விட கிராமங்கள் அதிகம். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகள், நெகமம் பேரூராட்சி உள்ளன.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகள்
அரசம்பாளையம், ஆண்டிபாளையம், செட்டிக்காபாளையம், தேவணாம்பாளையம், தேவராயபுரம், கோவிந்தாபுரம், கக்கடவு, காணியாலம்பாளையம், கப்பளாங்கரை, காட்டம்பட்டி, கொண்டம்பட்டி, கோதவாடி, கோவில்பாளையம், குளத்துப்பாளையம், குருநெல்லிபாளையம், குதிரையாளம்பாளைம், மன்றாம்பாளையம், மெட்டுவாவி, மேட்டுப்பாளையம், முள்ளுப்பாடி, நல்லட்டிபாளையம், பனப்பட்டி, பெரியகளந்தை, சிறுகளந்தை, சோளனூர், சூலக்கல், வடசித்தூர், வரதனூர் போன்ற ஊராட்சிகள் அடங்கும்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகள்.
சந்திராபுரம், சின்னநெகமம், வகுத்தம்பாளையம், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், தேவம்பாடி, ராமபட்டினம்,
தாளக்கரை, சிக்கராயபுரம், காபிலிபாளையம், ஒக்கிலிபாளையம், குரும்பபாளையம், குள்ளக்காபாளையம், வெள்ளாளபாளையம், தொப்பம்பட்டி, ராசக்காபாளையம், ஜமீன்முத்தூர், அய்யம்பாளையம், நல்லூத்துக்குளி, குமாரபாளையம், மண்ணூர், திம்மங்குத்து, ராசிசெட்டிபாளையம், போடிபாளையம், குளத்தூர் ஆகிய கிராம ஊராட்சிகள் உள்ளது.
பிரதான தொழில் - தென்னை விவசாயம், தென்னைநார் பொருட்கள் தயாரிப்பு
முக்கிய வாக்குறுதிகள்....
ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்,
அரசு கலைக்கல்லூரி அமைத்தல், பொள்ளாச்சி நகரத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தல், கொப்பரை தேங்காய் விலையை உயர்த்துதல்.
பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள, நடைபெறும் பணிகள்....
நீண்ட கால கோரிக்கையாக இருந்த பொள்ளாச்சியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்பட்டு கலைக்கல்லூரிக்கு புதிய கட்டடப்பணிகள் நடைபெற்றுவருகிறது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 5 மாடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.மேலும் இந்த கட்டடம் விரிவு படுத்தப்படவுள்ளது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் சிக்கலான பிரசவத்திற்கான புதிய கட்டடம் கட்டப்பட்டுவருகிறது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டுவருகிறது.
ஆனைமலையாறு நல்லாறு திட்டத்திற்கு இருமாநில முதல்வர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஆனைமலையாறு நல்லாறு திட்டம் அமைக்க இருமாநில அரசுகள் சார்பில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பொள்ளாச்சி நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலைகள் அகலப்படுத்தப்பட்டுவருகிறது.
பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்றுவருகிறது. பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் வடுகபாளையம் பிரிவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுவருகிறது.
கிழக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு புறவழிச்சாலை பணிகள் துவங்கியுள்ளது. பொள்ளாச்சி-திண்டுக்கல் நான்குவழிச்சாலை பணிகள் நடைபெற்றுவருகிறது. முக்கிய கிராமப்பகுதிகளுக்கு புதிய கூட்டுகுடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்றுவருகிறது.
மயிலாடுதுறை, தென்காசி போன்ற சிறிய பகுதிகள் கூட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டும் நீண்ட கால கோரிக்கையான பொள்ளாச்சி மக்கள் தொகை, பரப் பளவு அடிப்படையிலும் தகுதி இரு ந்தும் மாவட்டம் ஆக்கப்படாமல் உள்ளது பொள்ளாச்சி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி மாவட்டம் ஆக்கவேண்டும் என்பது பொள்ளாச்சி மக்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்றவேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தற்போது பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள பொள்ளாச்சி வி.ஜெயராமன் பொள்ளாச்சி தொகுதியில் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். ஒருமுறை உடுமலையில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது சட்டப்பேரவை துணைத்தலைவராகவும் உள்ளார். ஆகவே இந்த தொகுதி விஐபி தொகுதியாக பார்க்கப்படுகிறது. அதிகமான திட்டங்களை பொள்ளாச்சி தொகுதிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் பெற்றுதந்துள்ளார்.
குறிப்பாக பிஏபி திட்டம் துவங்கப்பட்டதில் இருந்து கிடப்பில் கிடக்கும் ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி உதவியுடன் இருமாநில முதல்வர்கள் சந்திக்க ஏற்பாடு செய்தார். திருவனந்தபுரத்தில் இருமாநில முதல்வர் சந்திப்பு நடைபெற்று இருமாநில உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை மாவட்டம் ஆக்க கோரிக்கை வைத்து பலமுறை சட்டப்பேரவையில் பேசியுள்ளார். சென்னை, மதுரையில் மட்டுமே இருக்கும் சிக்கலான பிரசவத்திற்கான மருத்துவமனை பொள்ளாச்சியில் அமைக்க முயற்சி செய்து, தற்போது பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் சிக்கலான பிரசவத்திற்கான மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டுவருகிறது.
பொள்ளாச்சி தொகுதியில் கிராமப்பகுதிகளில் 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் நடைபெற்றுவரும் நிலையில், தற்போது புதிய கூட்டுகுடிநீர் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த திட்டம் நிறைவடைந்தால் கிராமங்களுக்கு தினசரி குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளது. கரோனா கால கட்டத்தில் தொடர்ந்து 45 நாட்கள் 25 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கினார். இதுபோன்று பல முக்கிய திட்டங்களை கொண்டுவந்துள்ளது அதிமுகவிற்கு பலமாக உள்ளது.
குறைகள்...
பொள்ளாச்சி மாவட்டம் ஆக்கப்படாமல் உள்ளது, பொள்ளாச்சி பாலியல் வழக்கு போன்றவை அதிமுகவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்...
அதிமுக கூட்டணியில் பொள்ளாச்சியில் அதிமுகதான் போட்டியிடும் வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் திமுக, கொமதேக ஏதாவது ஒரு கட்சி போட்டியிட வாய்ப்புள்ளது.
அதிமுக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதால் அதிமுகவிற்கு பொள்ளாச்சி தொகுதியில் வெற்றிவாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது. இருந்தபோதும் மக்களின் முக்கிய எதிர்பார்ப்பான பொள்ளாச்சி மாவட்டம் ஆக்கப்படாமல் உள்ளதால் அதை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது.
2006 சட்டப்பேரவை தேர்தல் அதிமுகவை சேர்ந்த பொள்ளாச்சி வி.ஜெயராமன்(அதிமுக) 62,455
வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். சாந்திதேவி(திமுக) 59,509 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை சேர்ந்த முத்துகருப்பண்ணசாமி 81,446 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கொங்குநாடு முன்னேற்ற கழகத்தில் போட்டியிட்ட நித்தியானந்தன் 51,138 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தா ர்.
2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை சேர்ந்த பொள்ளாச்சி வி.ஜெயராமன் 78,553 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். திமுகவை சேர்ந்த தமிழ்மணி 65,185 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
2016 தேர்தலில் மற்ற கட்சியினர் பெற்ற வாக்குகள்
நித்தியானந்தம்(கொமதேக) 7,722
சிவக்குமார்(பிஜேபி) 5,363
முத்துக்குமார்(தேமுதிக) 4,893
உமாமகேஷ்வரி(நாம் தமிழர்) 1,369
கடந்த 12 சட்டப்பேரவை தேர்தல்களில் 8 முறை அதிமுகவும், ஒரு முறை சேவல் சின்னமும், மூன்று முறை திமுகவும் வெற்றிபெற்றுள்ளது.
1967 திமுக ஏபிசண்முகசந்தர கவுண்டர்
1971 திமுக ஏபிசண்முகசுந்தர கவுண்டர்
1977 அதிமுக ஓ.பி.சோமசுந்தரம்
1980 அதிமுக எம்.வி. ரத்தினம்
1984 அதிமுக எம்.வி. ரத்தினம்
1989 சேவல் சின்னம் வி.பி. சந்திரசேகர்
1991 அதிமுக வி.பி. சந்திரசேகர்
1996 திமுக ராஜூ
2001 அதிமுக பொள்ளாச்சி ஜெயராமன்
2006 அதிமுக பொள்ளாச்சி ஜெயராமன்
2011 அதிமுக முத்துகருப்பண்ணசாமி
2016 அதிமுக பொள்ளாச்சி வி.ஜெயராமன்.
-------
பொள்ளாச்சி சட்டப்பேரவைத் தொகுதி ஒரு பார்வை
Reviewed by Cheran Express
on
March 06, 2021
Rating: 5
Reviewed by Cheran Express
on
March 06, 2021
Rating: 5



No comments