மின்வாரிய ஊழியரை தாக்கியவர் மீது வழக்கு
மின்வாரிய ஊழியரை தாக்கியவர் மீது வழக்கு
பொள்ளாச்சி, மார்ச்.6
ஆழியாறு
அருகே உள்ள புளியங்கண்டி பகுதியை சேர்ந்த விவசாயி
செந்தில்வடிவேல்(50). செந்தில்வடிவேல் தனது தோட்டத்தில் மின் இணைப்பு பழுது
சம்பந்தமாக மின்வாரிய ஊழியர்களை வெள்ளிக்கிழமை அழைத்துள்ளார்.
இதையடுத்து, அங்கலக்குறிச்சி துணை மின்நிலைய மின்வாரிய ஆய்வாளர்கள்
கிருஷ்ணசாமி(55), மணியன்(54) மற்றும் கம்பியாளர்
ராஜன்(59) ஆகியோர் சென்று பழுது சரிசெய்ததாக கூறப்படுகிறது.
அப்போது தோட்டத்து உரிமையாளர் செந்தில்வடிவேலுக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கும் பழுது சம்பந்தமாக பேசியதில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மின்வாரிய ஊழியர்களை தோட்டத்து உரிமையாளர் தாக்கியதாக கூறப்படுகிறது.
பிரச்சனை குறித்து மின்வாரிய ஆய்வாளர்
கிருஷ்ணசாமி ஆழியாறு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்தது, தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
---

No comments