காரில் 4 கிலோ கஞ்சா கடத்த முயன்ற மூன்றுபேர் பொள்ளாச்சியில் கைது
காரில் 4 கிலோ கஞ்சா கடத்த முயன்ற மூன்றுபேர் பொள்ளாச்சியில் கைது
பொள்ளாச்சி, மார்ச்.5
பொள்ளாச்சி-பாலக்காடு
சாலையில் ஜமீன்முத்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை தேர்தல் பறக்கும்படையினர்
மற்றும் தாலூக்கா போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது,
பொள்ளாச்சியில் இருந்து கேரளா நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
காரில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, காரில் கஞ்சா
கடத்திய கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சித்திக்(39), சம்சுதீன்(37),
கேரள மாநிலம் கொல்லங்கோட்டை சேர்ந்த மனோஜ்(40) ஆகியோரை கைது செய்ததுடன்,
காரில் வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி
தாலூக்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஸ்கண்ணா, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பாலகணேஷ், வேளாண்மை துறை அதிகாரி மகேஷ்வரன், தலைமை காவலர் ராமராஜ், முதல்நிலை காவலர் ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கஞ்சா கடத்தியவர்களை கைது செய்தனர்.
முதல் கட்ட விசாரணையில் பழனியில் இருந்து கஞ்சாவை வாங்கி கேரளாவிற்கு
விற்பனைக்காக கொண்டு சென்றதாக தெரியவந்துள்ளது.
----

No comments