பைக்கிற்காக கொலைசெய்யப்பட்ட இளைஞரின் உடல் காண்டூர் கால்வாயில் மீட்பு
பைக்கிற்காக கொலைசெய்யப்பட்ட இளைஞரின் உடல் காண்டூர் கால்வாயில் மீட்பு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே விலை உயர்ந்த பைக்கிற்காக கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் காண்டூர் கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆதியூரைச் சேர்ந்தவர் அம்சவேல். இவரது மகன் புருஷோத்தமன் (19) பொள்ளாச்சியில் உள்ள இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 7 ம் தேதி ஆனைமலையில் உள்ள தனது நண்பர் உதயகுமாரை பார்த்துவிட்டு வருவதாக வீட்டில் கூறி விட்டு புதிதாக வாங்கிய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் சென்றவர் வீடு திரும்பவில்லை.
அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மேலும் புருஷோத்தமன் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து அம்சவேல் வடக்கிபாளையம் போலீஸில் புகார் செய்தார் . இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் மாயமான புருஷோத்தமனை தேடிவந்தனர். இந்நிலையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பணத்தகராறில் உதயகுமார் புருஷோத்தமனை காண்டூர் கால்வாயில் தள்ளியது தெரியவந்தது. தலைமறைவான உதயகுமாரை கைது செய்த போலீஸார்
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சனிக்கிழமை சிறையில் அடைத்தனர். காண்டூர் கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட புருஷோத்தமனின் உடலை எஸ்ஐ ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில்காண்டூர் கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
No comments