பொள்ளாச்சி தொகுதிக்கு முதல் வேட்பாளர் மனு தாக்கல்
பொள்ளாச்சி தொகுதிக்கு முதல் வேட்பாளர் மனு தாக்கல்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை அந்தந்தப் பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் தாக்கல் செய்து வருகின்றனர்.
பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் திங்கள்கிழமை மதியம் 2 .15 மணி அளவில் அமமுக வேட்பாளர் சுகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதன் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தணிகைவேல், பொள்ளாச்சி டிஎஸ்பி சிவக்குமார் ஆகியோர் இருந்தனர்.
அமமுக வேட்பாளர் சுகுமார் வேட்புமனு தாக்கல் செய்யும்போது உடன் சூலூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பனப்பட்டி தினகரன் இருந்தார்.
பொள்ளாச்சி சட்டப்பேரவை தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் முதல் வேட்பாளர் சுகுமார் ஆவார்.
No comments