Breaking News

பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

  பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி V.ஜெயராமன் அறிமுக கூட்டம் மற்றும் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P.வேலுமணி  தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்,
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி  வேட்பாளர் பொள்ளாச்சி V.ஜெயராமனை, உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P.வேலுமணி  அறிமுகப்படுத்தி,கடந்த ஐந்தாண்டு காலத்தில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு கொண்டுவரப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை எடுத்துக் கூறினார். 

அஇஅதிமுகவின் தேர்தல் அறிக்கையை பொது மக்களிடம் கொண்டு சேர்த்து பொள்ளாச்சி தொகுதி  வேட்பாளர் பொள்ளாச்சி V.ஜெயராமன் அவர்களை எவ்வாறு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் பொள்ளாச்சி V.ஜெயராமன்பேசுகையில்..

அதிமுக அரசு மீண்டும் அமைந்தவுடன் பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்கப்படும், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்ட்டுள்ள  ஆனைமலையாறு-நல்லாறு திட்டம், PAP பாசனப் பகுதியில் விடுபட்ட பகுதிகளையும்  சேர்த்தல் உள்ளிட்ட விவசாயத் திட்டங்களை நிறைவேற்றப்படும் என்றார்.
 
மாநில கோ-ஆப்டெக்ஸ்  தலைவரும்,மாவட்டக் கழக அவைத் தலைவருமான வெங்கடாசலம், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும்,பொள்ளாச்சி நகரக் கழக செயலாளருமான V.கிருஷ்ணகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளருமான M.K.முத்துக்கருப்பண்ணசாமி, ,பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் R.A.சக்திவேல், பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தம்பு(எ)தாமோதரன், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பாப்பு (எ) திருஞானசம்பந்தம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும் மாவட்டக் கழக துணைச் செயலாளருமான ராதாமணி, கழக பொதுக்குழு உறுப்பினர் K.P.சுப்பிரமணியம், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரகுபதி,
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார்,
மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ் ராஜா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் PRK.குருசாமி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் O.K.முருகன், பாஜக மாவட்ட தலைவர் வசந்தராஜன், தமாக மாவட்ட தலைவர் குணசேகரன்மற்றும்  பலர் பங்கேற்றனர். 

அதிமுக நிர்வாகிகள் ராஜாமுகமது, கோபி ஆனந்த் ஆகியோர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வேல் பரிசளித்தனர்.

No comments