Breaking News

கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

பொள்ளாச்சி, மார்ச்.16

 கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் செவ்வாய்க்கிழமை மலுமிச்சம்பட்டியில் நடைபெற்றது.

 கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு மதுக்கரை அதிமுக ஒன்றியச்செயலாளரும், கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினருமான எட்டிமடை சண்முகம் தலைமை வகித்தார். 

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கிணத்துக்கடவு அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் செ.தாமோதரனை அறிமுகப்படுத்தி பேசினார். 

மாநில கோ-ஆப்டெக்ஸ் தலைவர் வெங்கடாச்சலம், மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம், ஒன்றிய கழக செயலாளர்கள் சதீஷ்குமார் ,  சக்திவேல் பகுதி கழக செயலாளர்கள் பெருமாள் சாமி, ரபீக், பேரூராட்சி கழக செயலாளர்கள் மருதாசலம், மூர்த்தி, சண்முகராஜா, பாலு, ரமேஷ், கண்டியப்பன், வரதராஜ், பா.ஜ.க மாவட்ட தலைவர் வசுந்தராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments