Breaking News

பராமரிப்பு பணிக்காக சோலயார் அணையில் தண்ணீர் குறைப்பு

பராமரிப்பு பணிக்காக சோலயார் அணையில் தண்ணீர் குறைப்பு

பொள்ளாச்சி, மார்ச்.3: 
 

சோலையார் அணையில் 2வது மின் உற்பத்தி நிலையம் தண்ணீர் செல்லும் வழியில் உள்ள குப்பை தடுப்பான் சீரமைக்கும் பணிக்காக அணையின் நீர்மட்டம் குறைக்கப்பட்டுவருகிறது.         
            
 பரம்பிக்குளம்}ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டிஎம்சியும், கேரளத்திற்கு 19.55 டிஎம்சியும் நீர்பகிர்மானம் செய்துகொள்ளவேண்டும். இந்த திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் கட்டப்பட்டுள்ளது. 
 
இதில் 160 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையில் இருந்து கேரளத்திற்கு தண்ணீர் வழங்குவதுடன் இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் செயல்பாட்டில் உள்ளது. 
 
மேலும் பரம்பிக்குளம் அணைக்கும் சோலையாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது.
 சோலையாறு அணையின் இரண்டாவது மின்உற்பத்தி நிலையத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருக்கும் இரும்பினால் ஆன குப்பை தடுப்பான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீரிலேயே மூழ்கி கிடந்து பழுதடைந்துள்ளது. 
 
இதனால், மார்ச் இரண்டாவது வாரத்தில் இந்த குப்பை தடுப்பான் சீரமைக்கும் பணி நடைபெறவுள்ளது.
 இதற்காக தற்போது அணை நீர்மட்டம் குறைக்கப்பட்டுவருகிறது. தற்போது புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 6.43அடி உயரத்திற்கே நீர்மட்டம் உள்ளது. 
 
இந்த குப்பை தடுப்பாணை சீரமைக்காவிட்டால், பெரிய மரங்கள் போன்றவை தண்ணீர் அடித்து செல்லும்போது அதுமின் உற்பத்தி பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே அதற்கான பணிகள் மார்ச் இரண்டாவது வாரத்தில் துவங்கவுள்ளது.

 

No comments