Breaking News

அரிசி ராஜா யானை கூண்டிலிருந்து வெளியேற்றம்

அரிசி ராஜா யானை கூண்டிலிருந்து வெளியேற்றம் 
 

பொள்ளாச்சி. மார்ச். 3

பொள்ளாச்சி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறியபோது பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்ட அரிசி ராஜா யானை கூண்டிலிருந்து தற்போது வெளியேற்றப்பட்டு உள்ளது.

 ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக த்தை ஒட்டிய நவமலை வனப்பகுதியில் ஒரு முதியவர் மற்றும் சிறுமி ஆகியோர் அரிசி ராஜா யானை தாக்கியதில் உயிரிழந்தனர்.

 வனத்துறை ஊழியர் உட்பட சிலர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து அர்த்தனாரிபாளையம் பகுதியில் விவசாயி ஒருவரும் உயிரிழந்தார்.

 இதைத்தொடர்ந்து அரிசி ராஜா யானையைப் பிடிக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை அடுத்து வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி அரிசி ராஜா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

 இந்த யானை டாப்சிலிப் வரகளியாறு முகாமில் உள்ள கூண்டில் அடைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.
 ஆறு மாதங்களுக்குப் பிறகு கூண்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அரிசி ராஜா யானை பாகங்களின் கட்டுபாட்டுக்குள் வர மறுத்தது. மேலும் பாதத்தில் ஏற்பட்ட சிறிய புண்கள் காரணமாகவும் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.
 இதனால் மீண்டும் கூண்டில் அடைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூண்டிலிருந்து அரிசி ராஜா யானை வெளியேற்றப்பட்டு உள்ளது. இந்த தகவலை பொள்ளாச்சி வனக் கோட்ட மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியர் தெரிவித்துள்ளார்.

1 comment: