Breaking News

ஆனைமலை அருகே கணக்கில் வராத ரூ 2. லட்சம் பறிமுதல்

ஆனைமலை அருகே கணக்கில் வராத ரூ 2 லட்சம் பறிமுதல்
 

பொள்ளாச்சி. மார்ச். 5
ஆனைமலை அருகே கணக்கில் வராத ரூ. 2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

 பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மீனாட்சிபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
 அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஆனைமலையை சேர்ந்த ஒருவரிடம் சோதனை செய்த போது அவரிடம் கணக்கில் வராத ரூ. 2 லட்சம் இருப்பது தெரியவந்தது.
 இதையடுத்து ஆவணங்கள் பரிசோதித்தபோது அவரிடம் பணத்திற்கான முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது.
 இதை அடுத்து பொள்ளாச்சி தெற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார்,எஸ்ஐ கருணாநிதி, தலைமை காவலர்கள் சுமிதா, சமுத்திர பாண்டியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமி இடம் ஒப்படைத்தனர்.

 இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, முறையான ஆவணங்கள் ஏதுமில்லாமல் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து வந்தால் அவை பறிமுதல் செய்யப்படும்.
 தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் பணங்களை கொண்டு செல்பவர்கள் அதற்கான ஆவணங்களை கையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்றனர்.

No comments