ஆனைமலையில் தேங்காய் கொப்பரை ஏலம்
ஆனைமலையில் தேங்காய் கொப்பரை ஏலம்
பொள்ளாச்சி, மார்ச்.9
ஆனைமலை
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் கொப்பரை ஏலம் ஒவ்வொரு வாரமும்
செவ்வாய்க்கிழமை நடைபெறும். ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள
விவசாயிகள் கொப்பரைகளை ஏலத்திற்கு கொண்டுவருவார்கள்.
இந்த
வாரம் நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் முதல் தர கொப்பரை மொத்தம் 320 மூட்டை
விற்பனைக்கு வந்திருந்தது. ஒரு கிலோ கொப்பரை குறைந்த பட்சம் ரூ.115ற்கும்,
அதிகபட்சமாக ரூ.133.85 ற்கும் விற்பனையானது.
இரண்டாம் தர கொப்பரை
மொத்தம் 268 மூட்டை விற்பனைக்கு வந்திருந்தது. இதில் குறைந்த பட்சம் ஒரு
கிலோ ரூ.78 முதல் அதிகபட்சமாக 100.50 வரை விற்பனையானது.
87 விவசாயிகள்
கொப்பரைகளை கொண்டுவந்திருந்தனர். 12 வியாபாரிகள் கொப்பரைகளை
வாங்கிச்சென்றனர்.
----

No comments