Breaking News

பொள்ளாச்சியில் சந்தேகத்தின் அடிப்படையில் பிடிக்கப்பட்ட 1 கிலோ தங்க நகைகள்-ஆவணங்கள் சரிபார்த்த பின் திருப்பி ஒப்படைப்பு

 

பொள்ளாச்சியில் சந்தேகத்தின் அடிப்படையில் பிடிக்கப்பட்ட 1 கிலோ தங்க நகைகள்

ஆவணங்கள் சரிபார்த்த பின் திருப்பி ஒப்படைப்பு

பொள்ளாச்சி,மார்ச்.7
 

சந்தேகத்தின் அடிப்படையில் பிரபல நகைக்கடை மேலாளரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 1 கிலோ தங்க நகைகள் ஆவணங்களை பரிசோதிக்கப்பட்ட பின் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.
 
 பொள்ளாச்சி அடுத்த புரவிபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கேரளாவில் இருந்து வந்த வந்த வாகனத்தை சோதனை செய்தபோது அதில் வந்தவர் சுமார் 1 கிலோ எடையுடைய தங்க நகைகள் வைத்திருந்தது தெரியவந்தது.
 

இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன், தாலூக்கா காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிச்சாமி ஆகியோர் கொண்ட தேர்தல் பறக்கும் படை குழு நகைகளை பறிமுதல் செய்து பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதனிடம் ஒப்படைத்தனர். 

 தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதன் நகைகளை ஆய்வு செய்தார். அதற்கு பிறகு நகைக்கடை மேலாளர் சாஜி நகைக்கான ஆவணங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்ததுடன், பாலக்காடு அருகில் உள்ள ஒத்தக்கடையில் உள்ள நகை தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து நகைகளை பொள்ளாச்சியில் உள்ள நகைக்கடைக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார். ஆவணங்களை பரிசோதித்த பிறகு நகைகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. 
 
உடன் பொள்ளாச்சி வட்டாட்சியர் தணிகைவேல் இருந்தார்.
 
 தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதன் கூறுகையில், பொதுமக்கள்,
 வியாபாரிகள் தாங்கள் கொண்டுவரும் நகை, பணங்களுக்கு உரிய 
ஆவணங்கள் உடன் கொண்டுசெல்லவேண்டும்.  இல்லாவிட்டால் அவைகள் தேர்தல் பறக்கும் படையினரால் 
பறிமுதல் செய்யப்படும் என்றார்.

---

No comments