அரசு பேருந்து மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல்
அரசு பேருந்து மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல்
பொள்ளாச்சி. பிப். 27.
ஆனைமலையில் இருந்து பொள்ளாச்சி வந்த அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் பேருந்தின் முன்புற கண்ணாடி உடைந்தது.
ஆனைமலை
மாசாணியம்மன் கோவில் குண்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக
பொள்ளாச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை ஆனைமலையில் இருந்து சீனிவாசபுரம் வழியாக
பொள்ளாச்சி வந்த அரசுப் பேருந்தை சீனிவாசபுரம் பகுதியில் பாலத்தின் மேல்
நின்று மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியுள்ளனர்.
இதில் பேருந்தின் முன்புற
கண்ணாடி உடைந்தது. பேருந்தின் தற்காலிக ஓட்டுநர் ஆலாங்கடவை சேர்ந்த அருண்
(26) காயமடைந்தார். இதுகுறித்து, பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.

No comments