Breaking News

மிளகாய் வியாபாரிகள் உட்பட மூன்று பேரிடம் ரூ 3 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல்

மிளகாய் வியாபாரிகள் உட்பட மூன்று பேரிடம் ரூ 3 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல்

பொள்ளாச்சி. மார்ச். 7
 

மிளகாய் வியாபாரிகள் உட்பட மூன்று பேரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ 3.12 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
 
 பொள்ளாச்சி நடுப்புனி சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சனிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொள்ளாச்சியைச் சேர்ந்த மிளகாய் வியாபாரிகள் இரண்டு பேர் காரில் சென்றுள்ளனர். 
 
அதில் பொள்ளாச்சியை சேர்ந்த கார்த்திகேயன் ரூ 1.50 லட்சம் தொகையும், ஈஸ்வரன் என்பவர் 1லட்சத்தி 2 ஆயிரமும் வைத்திருந்தனர். அந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.
 
மேலும், கேரள மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரிடம் இருந்து முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ 60,000 பறிமுதல் செய்யப்பட்டது.
 மூன்று பேரிடமும் சேர்த்து ரூ 3.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. உடன் வட்டாட்சியர் தணிகைவேல் இருந்தார்.

 

No comments