பாஜக ஊடகப்பிரிவினருக்கான பயிலரங்கம்
பாஜக ஊடகப்பிரிவினருக்கான பயிலரங்கம்
பொள்ளாச்சி, பிப்.7
பொள்ளாச்சியில் பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகளுக்கு ஊடகத்துறை குறித்த பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு தலைவர் தனபாலகிருஷ்ணன் வரவேற்றார். பாஜக கோவை தெற்கு மாவட்டத்தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார். ஊடகப்பிரிவு மாநில செயலாளர் சபரிகிரிஷ் முன்னிலை வகித்தார்.
ஊடத்துறையின்
முக்கியத்துவம் குறித்து பாஜக மாநில பொருளாளரும், ஒரே நாடு பத்திரிக்கை
வெளியீட்டளருமான சேகர் பேசியது....
பாஜக ஊடகத்துறை நிர்வாகிகள் அதிக
புத்தகங்கள், பத்திரிக்கைகளை படிக்கவேண்டும். எந்த செயலையும் சிந்தித்து
செயல்படவேண்டும். தற்காத்து கொள்ளவேண்டிய தருணங்களில் தற்காப்பாகவும்,
எதிர்க்கவேண்டிய தருணங்களில் எதிர்க்கவும் செய்யவேண்டும் என்றார்.
ஊடகத்துறை
நிர்வாகிகளுக்கு தலைமைப்பண்புகள் என்ற தலைப்பில் நமது நம்பிக்கை இதழின்
ஆசிரியர் மரபின் மைந்தன் முத்தையை பேசினார்.
ஊடகத்துறைக்கு செய்திகளை
வழங்கும் முறை குறித்து தனியார் கல்லூரி பேராசிரியரும், பாஜக மாவட்ட
ஊடகப்பிரிவு தலைவருமான தனபாலகிருஷ்ணன் பேசினார்.

No comments