ஜெயலலிதாவிற்கு பிறகு பெண் தலைவராக இருப்பவர் பிரேமலதா மட்டுமே-விஜயபிரபாகரன் பேச்சு
ஜெயலலிதாவிற்கு பிறகு பெண் தலைவராக இருப்பவர் பிரேமலதா மட்டுமே
விஜயபிரபாகரன் பேச்சு
பொள்ளாச்சி, பிப்.7
ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழகத்தில் பெண் தலைவராக இருப்பவர் பிரேமலதா மட்டுமே என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.
தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னாள்
சட்டப்பேரவை உறுப்பினர் பனப்பட்டி தினகரன் தலைமை வகித்தார். முன்னாள்
சட்டப்பேரவை உறுப்பினர் பார்த்தசாரதி, நிர்வாகிகள் ஜெகன், முருகேசன், பாபு,
சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
விஜயபிரபாகரன்
பேசியது...
தமிழகத்தில் செல்லும் இடமெல்லாம் தேமுதிகவிற்கு வரவேற்பு
உள்ளது. தேமுதிகவை யாராலும் அசைக்கமுடியாது. எனது தந்தையின் ரத்தம்தான் என
உடம்பிலும் ஓடுகிறது. ஆகவே அப்பாவின் கனவை தாய் பிரேமலதா ஆலோசனையுடன் நான்
நிறைவேற்றுவேன். அதற்காகவே தொண்டர்களை சந்திக்கிறேன்.
மூன்றாவது அணி
அமைத்தால் சிலர் கிண்டல் செய்கிறார்கள். அப்படியென்றால் தமிழகத்தில்
மாற்றம் வேண்டுமா அல்லது வேண்டாமா.
தேமுதிக வினறுக்கு
பொறுமையாகவும் இருக்க தெரியும், பூகம்பமாகவும் மாறத்தெரியும்.
கட்சியையும், தொண்டர்களையும் என்றுமே நாங்கள் அடகு வைக்கமாட்டோம்.
மற்றகட்சிகளை விட அதிகமாக தேமுதிகவில்தான் இளைஞர்கள் அதிகம்.
கேப்டனால் தற்போது சரியாக பேச முடியவில்லை என்றாலும் அவரது குரல் முரசாக தமிழகம் முழுவதும் முழங்கும். தேமுதிவிற்கு 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடும் தைரியம் உண்டு. அவரது சிந்தனை முழுவதும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்காகத்தான். அடைய வேண்டிய இலக்கை தேமுதிக அடையும்.
ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழகத்திற்கு பெண் தலைவராக இருப்பவர் பிரேமலதா மட்டும்தான். அவரின் வழிகாட்டுதலால் தேமுதிக இலக்கை அடையும் என்றார்.


No comments