Breaking News

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு

 

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு

பொள்ளாச்சி, பிப்.8
 
 பொள்ளாச்சி அருகே பணியின்போது மின்வாரிய ஊழியர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
 
 

பொள்ளாச்சியை சேர்ந்தவர் பேச்சிமுத்து(39). தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வயர்மேனாக பணிபுரிந்துவருகிறார். திங்கள்கிழமை நாயக்கன்பாளையம் கிராமத்தில் மின்மாற்றியில் பழுது காரணமாக அதை சரிசெய்துள்ளார்.
 
அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்தார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே பேச்சிமுத்து உயிரிழந்தார். 
 
ஆனைமலை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

----

No comments