பங்குசந்தையில் லாபம் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை
பங்குசந்தையில் லாபம் கிடைக்கா ததால் இளைஞர் தற்கொலை
பொள்ளாச்சி, பிப்.9
கரோனா பாதிப்பு காரணமாக பங்கு சந்தையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
பொள்ளாச்சி ராஜாமில்சாலையில் பங்கு சந்தை ஏஜன்சி நடத்திவந்தவர் ஆச்சிபட்டியை சேர்ந்த அசோக்குமார்(32). இவர் பங்கு சந்தையில் முதலீடு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தான் முதலீடு செய்திருந்த
பணத்திற்கு போதிய லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில்,
செவ்வாய்க்கிழமை பங்கு சந்தை அலுவலத்திலேயே அசோக்குமார் பூச்சிகொல்லி
மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்தார்.
பொள்ளாச்சி மேற்கு போலீஸார் விசாரணை
நடத்திவருகின்றனர்.
---

No comments