பொள்ளாச்சியில் வாகன கழிவுகளில் தீ விபத்து
பொள்ளாச்சியில் வாகன கழிவுகளில் தீ விபத்து
பொள்ளாச்சி, பிப்.10
பொள்ளாச்சியில் வாகன கழிவுகளில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
பொள்ளாச்சியில் மிகப்பெரிய சந்தையாக கருதப்படும் காந்தி மார்க்கெட்டில் காய்கறி, மீன் விற்பனை அங்காடி , பழைய இரும்பு வியாபாரம், வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடைபெற்றுவருகின்றன.
இதில்
பழைய வாகனங்களை உடைத்து விற்கும் மார்க்கெட்டில் வாகன கழிவுகள் கொட்டி
வைக்கும் பகுதியில் புதன்கிழமை காலை தீவிபத்து ஏற்பட்டது. பொள்ளாச்சி
தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பழைய
இரும்பு, சீட்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் இருந்ததால் தீயை அணைக்க
காலதாமதமானது. உடைப்பதற்காக கொண்டுவரப்பட்டிருந்த பழைய பேருந்து, லாரி,
ஆட்டோ போன்றவற்றின் முன்பகுதியும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து
பொள்ளாச்சி மேற்கு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
----

No comments