Breaking News

ஊக்கத்தொகையை உயர்த்தவேண்டி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

ஊக்கத்தொகையை உயர்த்தவேண்டி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

பொள்ளாச்சி, பிப்.9
 
 ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கவேண்டி அரசுக்கு கோரிக்கை வைத்து மாற்றுத்திறனாளிகள் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
 

 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிவரும் ஊக்கத்தொகையை அரசு உயர்த்தி வழங்கவேண்டி பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவகத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தொடர்ந்து இரவும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 போராட்டம் குறித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தின் அமைப்பாளர்  பாலசுப்ரமணியம் கூறியது.... கரோனா தொற்று பரவல் காரணமாக அத்தியாவசியப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. 

 இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிவரும் ரூ.ஆயிரத்தை, ரூ. 3 ஆயிரமாகவும், கடுமையான மாற்றுத்திறனாளிகளுக்கான ஊக்கத்தொகையான ரூ.1500 ஐ உயர்த்தி ரூ.5 ஆயரமாகவும் வழங்கவேண்டும். 

அதுபோல், புதிய சட்ட விதிகளின்படி 4 சதவீத இட ஒதுக்கீடு  வழங்கி கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கவேண்டும். இந்த கோரிக்கைகளை முன் வைத்து பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம் என்றார்.

 

No comments