Breaking News

பொள்ளாச்சியில் வீட்டு பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு

பொள்ளாச்சி, பிப்.8
 பொள்ளாச்சி அருகே வீட்டு பூட்டை உடைத்து 9 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
 பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டி செல்வகணபதி நகரைச்சேர்ந்தவர் கணேசன். கட்டுமான வேலை செய்துவருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் திருநள்ளாறு கோயிலுக்கு சென்றுள்ளார்.  திங்கள்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டுக்குள் பீரோவில் வைத்திருந்த ரூ.9 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

----

 

No comments