Breaking News

பொள்ளாச்சி அருகே யானையின் கோரை பற்கள் விற்பனை- ஜவுளிக்கடை உரிமையாளர் உட்பட இருவர் கைது

பொள்ளாச்சி அருகே யானையின் கோரை பற்கள் விற்பனை

ஜவுளிக்கடை உரிமையாளர் உட்பட இருவர் கைது

பொள்ளாச்சி, பிப்.16
 
 

பொள்ளாச்சி அருகே யானையின் கோரை பற்கள் விற்க முயன்றவரையும், அதை வாங்க முயன்ற ஜவுளிக்கடை உரிமையாளரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
 
 பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் பகுதியில் உயிரிழந்த பெண் யானையின் கோரை பற்களை திருடி விற்பனை செய்வதாக பொள்ளாச்சி கோட்ட மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை வேட்டைக்காரன்புதூர் பகுதியில் வனத்துறையினர் மாறுவேடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
 

அப்போது, வேட்டைக்காரன்புதூர் பகுதியில் உள்ள சாமுண்டீஸ்வரி டெக்ஸ்டைல்ஸ் ஜவுளிக்கடையில் வைத்து இரண்டு கோரை பற்களை பல லட்சத்திற்கு விற்பனை செய்ய விலை பேசிவருவது தெரியவந்தது.
 
 ஜவுளிக்கடைக்கு சென்ற வனத்துறையினர் கோரை பற்களை விற்கமுயன்ற தம்மம்பதியை சேர்ந்த மணியன்(42) என்பவரையும், கோரை பற்களை வாங்க முயன்ற ஒடையகுளத்தை சேர்ந்த  ஜவுளிக்கடை உரிமையாளர் மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். 
 
அவர்களிடமிருந்த இரண்டு கோரை பற்களும் பறிமுதல் செய்யப்ப்டடது. கைது செய்யப்பட்ட இருவரும் பொள்ளாச்சி ஜெ.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மணியன் மீது ஏற்கனவே சந்தன கட்டை கடத்திய வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments