Breaking News

பொள்ளாச்சியில் திமுகவினர் 136 பேர் கைது

பொள்ளாச்சியில் திமுகவினர் 136 பேர் கைது

பொள்ளாச்சி. பிப். 16.
 
பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்கக் கோரி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 136 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
 
 

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பாதாள சாக்கடை பணிகள் நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிறைவடையாமல் உள்ளது. நகர் பகுதியில் உள்ள சாலைகள் தோண்டப்பட்டு, குண்டும் குழியுமாக உள்ளதால், தினந்தோறும் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
 
 

இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டம் காலதாமதாக நடைபெறுவதை கண்டித்தும், குப்பை வரியைரத்து செய்ய வலியுறுத்தியும், செவ்வாய்க்கிழமை பொள்ளாச்சி நகர திமுக பொறுப்பாளர் வரதராஜன் தலைமையில்,  நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 
 
 முற்றுகையில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 136 திமுகவினரை கைது செய்தனர்.  திமுக நகர துணை செயலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர். 
 
அதற்கு முன்பாக திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் திமுகவினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கேஸ் விலை உயர்வை கண்டித்து கேஸ் சிலிண்டர் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 

No comments